நேபாள கிரிக்கெட் அணி.  படம்: எக்ஸ் / கிரிக்கெட்என்இபி
கிரிக்கெட்

டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைத்த நேபாளம்!

டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைத்த நேபாள கிரிக்கெட் அணி குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நேபாள கிர்க்கெட் அணி, தன்னுடைய டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக டெஸ்ட் விளையாடும் ஓர் அணியை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளம் வென்றுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில், மேற்கிந்தியத் தீவுகள் அணியும் நேபாளம் அணியும் தங்களது முதல் டி20 கிரிக்கெட்டில் மோதினார்கள்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நேபாளம் அணி 20 ஓவர்களுக்கு 148/8 ரன்கள் எடுத்தது. அதில், அதிகபட்சமாக அணியின் கேப்டன் ரோஹித் பௌடேல் 38, குஷால் மல்லா 30 ரன்கள் எடுத்தார்கள்.

அடுத்து விளையாடிய மே.இ.தீ. அணி 20 ஓவர்களில் 129-9 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் அதிகபட்சமாக நவீன் பிடாசி 22, அமீர் ஜாங்கோ 19 ரன்களும் எடுத்தார்கள்.

நேபாளம் அணியில் குஷால் புர்தெல் 2, மற்ற 5 பந்துவீச்சாளர்கள் தலா 1 விக்கெட்டும் எடுத்து அசத்தினார்கள்.

180-ஆவது சர்வதேச போட்டியில்தான் ( 77 ஒருநாள், 103 டி20) நேபாளம் டெஸ்ட் விளையாடும் ஓர் அணியை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.

இரண்டாவது டி20 போட்டியில் செப்.29ஆம் தேதி ஷார்ஜாவில் இரு அணிகளும் மோதுகின்றன.

ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அனுபமிக்க வீரர்கள் குறைவாகவே இருப்பதால் தோல்வ்பியுற்றார்களா என்பது குறித்து ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

The Nepal cricket team has created history by defeating a Test-playing team for the first time in T20 cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னக்குழி... பரமேஸ்வரி!

கரூர் பலி: அனைத்து உடல்களும் ஒப்படைப்பு

ஐபோனுக்கு போட்டியாக ஒன்பிளஸ் 15..! விலை, வெளியீடு, சிறப்பம்சங்கள் என்ன?

கரூர் பலி 40ஆக உயர்வு! துணை முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

டவுன்ஹால் பகுதியில் அடுத்தடுத்த 3 கடைகளில் தீ விபத்து!

SCROLL FOR NEXT