முகப்பு
கிரிக்கெட்

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சூர்யகுமார் யாதவின் ஆதிக்கம் தொடருமா?

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்வாரா என்பது குறித்து...

Updated On : 7 ஏப்ரல் 2026, 5:58 pm IST
மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் - படம் | AP
பகிர்:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தைத் தொடர்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஐபிஎல் தொடரில் குவாஹாட்டியில் இன்று (ஏப்ரல் 7) நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் களமிறங்குகிறது. தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக ஏற்பட்ட தோல்வியிலிருந்து மீண்டு வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் களம் காண்கிறது.

இந்தியா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சூர்யகுமார் யாதவ் தனது அதிரடியான பேட்டிங் மூலம் தொடர்ச்சியாக ரன்கள் குவித்து அசத்தி வருகிறார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு அவர் அதிக ரன்கள் குவித்துள்ளார். அதனால், ராஜஸ்தானுக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் இன்றையப் போட்டியிலும் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement

Advertisement

இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 15 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ், 42.66 என்ற சராசரியுடன் 512 ரன்கள் குவித்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக அவர் 147.12 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியுள்ளார். மேலும், அந்த அணிக்கு எதிராக அவர் 4 அரைசதங்கள் விளாசியுள்ளார். அந்த அணிக்கு எதிராக அவரது அதிகபட்ச ஸ்கோர் 79* ஆகும்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ், 67 ரன்கள் எடுத்துள்ளார். அதில் ஒரு அரைசதம் அடங்கும். ஐபிஎல் தொடரில் 153 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 4378 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாக அவர் 2 சதங்கள் மற்றும் 30 அரைசதங்கள் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Regarding whether Suryakumar Yadav will continue his excellent form against the Rajasthan Royals...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.