முகப்பு
கிரிக்கெட்

மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணி இரண்டாவது முறையாக சாம்பியன்!

மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணிக்கு இரண்டாவது கோப்பை!

Updated On : 5 பிப்ரவரி, 2026 at 7:13 PM
- @RCBTweets
பகிர்:

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நான்காவது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது. மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் வதோதராவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, தில்லி கேபிடல்ஸ் முதலில் விளையாடியது.

முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் 203 ரன்கள் எடுத்தது. அதனைத்தொடர்ந்து, இமாலய இலக்கை சேஸிங் செய்த ஆர்சிபி அணி தொடக்க வீராங்கனையான கிரேஸ் ஹாரிஸ் 9 ரன்களில் நடையைக்கட்டினாலும், நிலைத்து நின்று அதிரடியாக விளையாடிய கேப்டன் ஸ்மிரிதி மந்தனா 3 சிக்ஸர்கள், 12 பௌண்டரிகளுடன் 41 பந்துகளில் 87 ரன்கள் குவித்து அசத்தினார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 212.20 என்பது குறிப்பிடத்தக்கது. ஜார்ஜியா வோல் தம் பங்கிற்கு 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதனால் ஆர்சிபி அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை கடந்தது. இதன்முலம், 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

  • 2023இல் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் முதலாவது சீசனில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

  • 2024இல் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி சாம்பியனாக முதல்முறையாக மகுடம் சூடியது.

  • 2025இல் மீண்டுமொருமுறை தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் சாம்பியனானது..

  • இந்த நிலையில், தில்லி கேபிடல்ஸ் அணியின் துரதிருஷ்டம் இந்தாண்டும் தொடருகிறது.

summary

Royal Challengers Bengaluru have Claimed the Crown once again in spectacular fashion to clinch the WPL 2026 title

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.