சூர்யகுமார் யாதவின் தலைமைப் பண்பு என்னுடைய வேலையை எளிதாக்கியது: கௌதம் கம்பீர்
சூர்யகுமார் யாதவின் தலைமைப் பண்பு டி20 போட்டிகளில் தன்னுடைய வேலையை மிகவும் எளிதாக்கியதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
சூர்யகுமார் யாதவின் தலைமைப் பண்பு டி20 போட்டிகளில் தன்னுடைய வேலையை மிகவும் எளிதாக்கியதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று முன் தினம் (பிப்ரவரி 7) தொடங்கியது. இந்த தொடரில் இந்திய அணி அதன் முதல் போட்டியில் அமெரிக்காவை எதிர்த்து விளையாடியது.
இந்தப் போட்டியில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாற, ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அரைசதம் விளாசி இந்திய அணி ஓரளவுக்கு நல்ல ஸ்கோரை எட்ட உதவினார். அந்தப் போட்டியில் இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தியது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அமைதியாக அணியை வழிநடத்தும் சூர்யகுமார் யாதவின் தலைமைப் பண்பு மிகவும் அழுத்தம் நிறைந்த தன்னுடைய பயிற்சியாளர் பணியை எளிதாக்கியதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: டி20 வடிவிலான போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் என்னுடைய வாழ்க்கையை மிகவும் எளிதாக மாற்றிவிட்டார். அவர் அணியை மிகவும் சிறப்பாக வழிநடத்தக் கூடியவர். ஆடுகளத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அவர் அணி வீரர்களிடம் மிகவும் நன்றாக பழகக் கூடியவர். அணியில் உள்ள வீரர்களிடத்தில் அவர் பேசும் விதம் மற்றும் அவர்களுடன் செலவிடும் நேரம் என அனைத்துக்கும் அவர் முக்கியத்துவம் கொடுப்பார். அணியின் பயிற்சியாளராக என்னுடைய வேலையை அவர் மிகவும் எளிதாக்கிவிட்டார் என்றார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி அதன் அடுத்தப் போட்டியில் வருகிற பிப்ரவரி 12 ஆம் தேதி நமீபியாவை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.
Indian team's head coach Gautam Gambhir has stated that Suryakumar Yadav's leadership qualities have made his job much easier in T20 matches.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.