ஒற்றுமைக் கோப்பைக்கான 28 பேர் கொண்ட இந்திய கால்பந்து அணி!
ஒற்றுமைக் கோப்பைக்கான இந்திய கால்பந்து அணி குறித்து...
இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் ஒற்றுமைக் கோப்பைக்கான 28 பேர் கொண்ட இந்திய கால்பந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைப் பயிற்சியாளர் காலித் ஜமில் இந்த அணியை அறிவித்துள்ளார்.
இந்தியன் சூப்பர் லீக் போட்டிகள் முடிவடைந்த பிறகு அனைத்து வீரர்களும் பெங்களூரில் கூடுகின்றனர். அங்கிருந்து லண்டனுக்கு மே.24ஆம் தேதி கிளம்புகிறார்கள்.
பெங்களூரில் நடைபெறும் கூட்டத்தில் இறுதிக்கட்ட அணியான 23 பேரை தலைமைப் பயிற்சியாளர் தேர்வு செய்வார் எனக் கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
ஃபிஃபா தரவரிசையில் இந்திய அணி 136ஆவது இடத்திலும் ஜமைக்கா 71ஆவது இடத்திலும் நைஜீரியா 26ஆவது இடத்திலும் ஜிம்பாப்வே 130ஆவது இடத்திலும் இருக்கின்றன. இந்த 4 அணிகள்தான் யுனைடி கப் எனப்படும் ஒற்றுமைக் கோப்பையில் விளையாடுகின்றன.
இது குறித்து பயிற்சியாளர் ஜமீல் கூறியிருப்பதாவது: இந்தாண்டு இறுதியில் வரும் எஸ்ஏஎஃப்எஃப் போன்ற தொடர்களுக்கு தயாராகுவதற்கு உதவியாக இந்த ஒற்றுமைக் கோப்பை போட்டிகள் இருக்கும்.
ஃபிஃபா ஏற்படுத்தும் ஒவ்வொரு வாய்ப்பையும் நாங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஐஎஸ்எல் தொடரில் சிறப்பாக செயல்பட்டவர்களை வைத்து 26 பேர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்கள்.
வலுவான எதிரணியுடன் விளையாடும்போது தன்னம்பிக்கை ஏற்படும். இதுபோன்ற பல போட்டிகளில் விளையாட வேண்டும் எனக் கூறினர்.
கோல்கீப்பர்கள்: குர்ப்ரீத் சிங் சந்து, விஷால் கைத், ஹிருதிக் திவாரி, அல்பினோ கோம்ஸ்.
டிஃபெண்டர்ஸ்: ராகுல் பீக்கே, நிகில் பூஜாரி, ரோஷன் சிங் நாரேம், அபிஷேக் சிங் தக்சிம், அன்வர் அலி, சந்தேஷ் ஜிங்சன், ஆகாஷ் மிஸ்ரா, பிஜோய் வர்கீஸ், ப்ரம்வீர்.
மிட்ஃபீல்டர்: ஆஷிக் குருனியன், லாலெங்மாவியா ரால்டே, சாஹல் அப்துல் சமத், அனிருத் தாபா, ஜீக்சன் சிங் தௌனோஜாம், நௌஃபல் பிஎன், ரிக்கி ஷபோங்.
ஃபார்வேடுகள்: ரியான் வில்லியம்ஸ், மன்வீர் சிங், லிஸ்டன் கோலாகோ, சுஹைல் அகமது பட், எட்மன்ட் லால்ரிண்டிகா, லல்லியன்சுவாலா சாங்டே, ரஹீம் அலி, ஃபரூக் சவுத்ரி.
போட்டிகள் விவரம்:
அரையிறுதி 1
மே,27: நைஜீரியா - ஜிம்பாப்வே
அரையிறுதி 2
மே.28: ஜமைக்கா - இந்தியா
இறுதிப் போட்டி, ஃபிளேஆஃப்கான மூன்றாமிடம்
மே.30. முதலிரண்டு அரையிறுதில் வெல்லும் அணிகளும் தோற்கும் அணிகளும் மோதுகின்றன.
Khalid Jamil announces 28-member preliminary squad for Unity Cup 2026
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.