முகப்பு
கிரிக்கெட்

ஆர்யன்ஷ் சர்மா, சோஹைப் கான் அரைசதம்; கனடாவை வீழ்த்திய ஐக்கிய அரபு அமீரகம்!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் கனடாவுக்கு எதிரான போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Updated On : 13 பிப்ரவரி 2026, 7:34 pm IST
அரைசதம் விளாசிய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஆர்யன்ஷ் சர்மா - படம் | AP
பகிர்:

டி20 உலகக் கோப்பைத் தொடரில் கனடாவுக்கு எதிரான போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் தில்லி அருண் ஜெட்லி திடலில் இன்று (பிப்ரவரி 13) நடைபெற்ற போட்டியில் கனடா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் விளையாடின.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய கனடா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்தது.

Advertisement

Advertisement

அந்த அணியில் அதிகபட்சமாக ஹர்ஷ் தாக்கெர் அரைசதம் எடுத்தார். அவர் 41 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, நவ்நீத் தலிவால் 34 ரன்களும், ஷ்ரேயாஸ் மோவா 21 ரன்களும் எடுத்தனர்.

ஐக்கிய அரபு அமீரகம் தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜூனைத் சித்திக் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முகமது ஜாவதுல்லா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

ஆர்யன்ஷ் சர்மா, சோஹைப் கான் அசத்தல்!

151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரகம், 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐக்கிய அரபு அமீரக அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆர்யன்ஷ் சர்மா மற்றும் சோஹைப் கான் அரைசதம் கடந்து அசத்தினர். ஆர்யன்ஷ் சர்மா 53 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். சோஹைப் கான் 29 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும், ஆர்யன்ஷ் சர்மா மற்றும் சோஹைப் கானின் சிறப்பான ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வெற்றி பெற்றுத் தந்தது.

கனடா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய சாத் பின் ஸாஃபர் 4 ஓவர்களில் வெறும் 14 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கலீம் சனா மற்றும் ஜஸ்கரன் சிங் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜூனைத் சித்திக்குக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

summary

The United Arab Emirates won their match against Canada by 5 wickets in the T20 World Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments