முகப்பு
கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து அயர்லாந்து கேப்டன் விலகல்!

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டிரிலிங் காயம் காரணமாக விலகியுள்ளார்.

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 2:34 PM
கேப்டன் பால் ஸ்டிரிலிங் - படம் | அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
பகிர்:

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டிரிலிங் காயம் காரணமாக விலகியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின்போது, அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டிரிலிங்குக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால், ஓமனுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து பால் ஸ்டிரிலிங் விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

காயம் காரணமாக டி20 உலகக் கோப்பைத் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகியுள்ள அவருக்குப் பதிலாக, அயர்லாந்து அணியில் இளம் அன்கேப்டு வீரர் சாம் டாப்பிங் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக டி20 உலகக் கோப்பைத் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டிரிலிங் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக சாம் டாப்பிங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்து - ஓமன் இடையேயான போட்டி நாளை (பிப்ரவரி 14) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Ireland captain Paul Stirling has been ruled out of the T20 World Cup due to injury.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.