முகப்பு
கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு; வெற்றி தொடருமா?

டி20 உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 1:28 PM
- படம் | AP
பகிர்:

டி20 உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் அகமதாபாதில் இன்று (பிப்ரவரி 14) நடைபெறும் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் அய்டன் மார்க்ரம் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்கிறது.

தென்னாப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவனில் ஜார்ஜ் லிண்டேவுக்குப் பதிலாக கார்பின் போஷ்ச் சேர்க்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணி கடந்த போட்டியில் விளையாடிய பிளேயிங் லெவனில் மாற்றமில்லாமல் களமிறங்குகிறது.

குரூப் டி பிரிவில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இதுவரை விளையாடியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The South African team has opted to bowl in its match against New Zealand in the T20 World Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.