ஜிம்பாப்வேயிடம் ஆட்டமிழந்த டிராவிஸ் ஹெட்.  படம்: ஏபி
கிரிக்கெட்

இதுபோன்ற சூழ்நிலையில் நாங்கள் ஏற்கெனவே இருந்திருக்கிறோம்..! ஆஸி. கேப்டன் நம்பிக்கை!

தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிராவிஸ் ஹெட் பேசியிருப்பதாவது...

இணையதளச் செய்திப் பிரிவு

ஜிம்பாப்வே அணியிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிராவிஸ் ஹெட் பேசியது ரசிகர்களிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

”நாங்கள் ஏற்கெனவே இதுபோன்ற சூழ்நிலையில் (2023 உலகக் கோப்பை) இருந்திருக்கிறோம் என்பதால் எப்படி வெளியே வருவது எனத் தெரியும்” என்றார்.

நாங்கள் ஏற்கெனவே இதுபோல இருந்திருக்கிறோம்

ஜிம்பாப்வே அணியிடம் தோல்வியுற்றது மிகப்பெரிய பின்னடைவை ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தோல்வி குறித்து தற்போதைய கேப்டன் டிராவிஸ் ஹெட் பேசியிருப்பதாவது:

இந்தப் போட்டி முழுவதும் எங்களுக்குக் கிடைத்த பின்னூட்டங்கள் எல்லாமே பிட்ச் நன்றாக இருக்கிறது என்பதுதான்.

பவர்பிளேவில் அதிகமாக ஆட்டமிழந்து, நாங்களே எங்களை அழுத்ததிற்கு உள்ளாக்கிக் கொண்டோம்.

இடையில் நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தாலும் ஆட்டமிழந்து கொண்டே வந்ததால் இப்படி ஆகிவிட்டது.

அதனால், வருத்தமடைந்துள்ளோம். ஆனால், இதுதான் கிரிக்கெட். நாங்கள் ஏற்கெனவே இதுபோன்ற சூழ்நிலையில் இருந்திருக்கிறோம்.

மீதமுள்ள 2 போட்டிகளில் வெல்வோம்

டாஸின் போது நான் சொன்னதுபோல காயங்கள் உடன் விளையாடுவது வழக்கமாகி விட்டது. பல போட்டிகள் மிகவும் நெருக்கமாகச் செல்வதைப் பார்க்கிறோம். அனைத்து அணிகளுமே நன்றாக இருக்கின்றன.

இந்த மாதிரியான சூழ்நிலையில் இருந்து நாங்கள் எப்படி முன்னேறுவது என எங்களுக்குத் தெரியும்.

2023 உலகக் கோப்பையில் இந்தியாவில் இதைச் செய்யும்போது அணியில் இருந்த வீரர்கள் சிலரும் இப்போதும் இருக்கிறார்கள்.

அதேமாதிரியான ப்ளூபிரிண்டை (மூல வரைபடம்) பயன்படுத்தி நம்பிக்கையுடன் மீதமுள்ள 2 போட்டிகளில் வெல்வோம் என்றார்.

இதற்கு முன்பாக 2007ல் ஒருமுறை ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையும் வீழ்த்தியிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Australian captain Travis Head's speech about the 23-run loss to Zimbabwe has brought comfort to fans.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதலர் தினத்தைக் கொண்டாட வேண்டுமா?

அரசு மருத்துவமனையில் குழந்தைக் கடத்தல் சம்பவம்: விஜய் கண்டனம்!

யார் அந்த வேலன்டைன்?

5 மொழிகளில் வெளியாகும் சத்தா பச்சா..! ஓடிடி ரிலீஸ் தேதி!

லோகேஷ் கனகராஜ் நடிக்கும் டிசி படத்தின் கிளிம்ஸ் விடியோ!

SCROLL FOR NEXT