முகப்பு
கிரிக்கெட்

இந்தியாவின் முதல் வீரர்..! டி20யில் ஹார்திக் பாண்டியாவின் வரலாற்றுச் சாதனை!

இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா நிகழ்த்திய வரலாற்றுச் சாதனை குறித்து...

Updated On : 19 பிப்ரவரி 2026, 1:32 pm IST
ஹார்திக் பாண்டியா. - படங்கள்: எக்ஸ் / மும்பை இந்தியன்ஸ், ஹார்திக் பாண்டியா.
பகிர்:

இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா டி20 போட்டிகளில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இந்திய வீரர்களிலேயே முதல்முறையாக 6,000க்கும் அதிகமான டி20 ரன்கள் மற்றும் 220க்கும் அதிகமான விக்கெட்டுகளை எடுத்தவராக சாதனை படைத்துள்ளார்.

ஹார்திக் பாண்டியாவின் வரலாற்றுச் சாதனை

Advertisement

Advertisement

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டராக ஹார்திக் பாண்டியா (32 வயது) இருக்கிறார்.

நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் கேப்டன் கேட்டுகொண்டதற்கு இணங்க, ஹார்திக் பாண்டியா நிதானமாக விளையாடி 30 ரன்கள் எடுத்தார்.

பந்துவீச்சில் 1 விக்கெட்டும் எடுத்து அசத்திய ஹார்திக் ஐசிசி தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

இந்தப் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா மொத்தமாக 323 போட்டிகளில் 6,008 ரன்களும் மற்றும் 222 விக்கெட்டுகளை எடுத்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

குங்ஃபூ பாண்டியா

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருக்கும் ஹார்திக் பாண்டியாவின் இந்த சாதனையை கௌரவிக்கும் பொருட்டு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

ஹார்திக் பாண்டியாவை ’குங்ஃபூ பாண்டியா’ என ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள். அதைப் பிரதிபலிக்கும் விதமாக மும்பை இந்தியன்ஸ் அணி போஸ்டரை உருவாக்கியுள்ளது.

இந்திய அணி கடந்த டி20 உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவரும் ஹார்திக் பாண்டியாதான். தற்போது, இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தேர்வாகியுள்ளது.

சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி தனது அனைத்து போட்டிகளையும் சொந்த மண்ணிலேயே விளையாடுகிறது.

summary

India's first player..! Hardik Pandya's historic achievement in T20!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.