இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்தாண்டு நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்தில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடர் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி நடைபெறவிருக்கிறது.
இந்த நிலையில், உலகக் கோப்பைத் தொடரில் விளையாடவுள்ள மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அணி விவரம்
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், சேவியர் பார்ட்லெட், ஜோஷ் இங்லிஸ், கூப்பர் கானோலி, மேத்யூ குன்னஹ்மேன், பாட் கம்மின்ஸ், கிளென் மேக்ஸ்வெல், டிம் டேவிட், மேத்யூ ஷார்ட், கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டோனிஸ், நாதன் எல்லிஸ், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
உலகக் கோப்பை ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்தின் பெயர் இடம் பெறவில்லை.
கொழும்பு மைதானத்தில் பிப். 11 ஆம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை ஆஸ்திரேலியா எதிர்கொள்ளவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.