19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நமீபியா கிரிக்கெட் திடலில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தென்னாப்பிரிக்கா முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 32.1 ஓவர்களில் 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
அந்த அணியில் பால் ஜேம்ஸ் அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார். ஜோரிச் வான் 26 ரன்களும், முகமது புல்புல்லா 19 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஆஸ்திரேலியா தரப்பில் சார்லஸ் லாச்மண்ட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வில் பைரோம் மற்றும் ஆர்யன் சர்மா தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஹைடன் சில்லர் மற்றும் கேசி பார்ட்டன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
ஆஸ்திரேலியா வெற்றி
119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 32.5 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.
ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் ஹோகன் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அலெக்ஸ் லீ யங் மற்றும் ஜேடன் டிரேப்பர் தலா 21 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் ஜேஜே பாஸன் 3 விக்கெட்டுகளையும், பயாண்டா மஜோலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய சார்லஸ் லாச்மண்டுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.