ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 2) அறிவித்துள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறுகிறது. போட்டிகள் அனைத்தும் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 2) அறிவித்துள்ளது.
15 பேர் கொண்ட ஜிம்பாப்வே அணியை சிக்கந்தர் ராஸா கேப்டனாக வழிநடத்துகிறார்.
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான ஜிம்பாப்வே அணி விவரம்
சிக்கந்தர் ராஸா (கேப்டன்), பிரையன் பென்னட், ரியான் பர்ல், கிரீம் கிரிமர், பிராட்லி ஈவன்ஸ், கிளைவ் மடாண்ட், டினோடெண்டா மபோசா, மருமானி, வெலிங்டன் மசகட்ஸா, டோனி முனியோங்கா, தாஷிங்கா முஷேகிவா, பிளெஸ்ஸிங் முஸராபானி, டியான் மேயர்ஸ், ரிச்சர்ட் நிகராவா, பிரண்டன் டெய்லர்.
உலகக் கோப்பைத் தொடரில் வருகிற பிப்ரவரி 9 ஆம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணி ஓமனை எதிர்த்து விளையாடவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.