தேவ்தத் படிக்கல் விஜய் ஹசாரே கோப்பையில் இந்த சீசனிக் மட்டும் ஐந்து போட்டிகளில் தனது நான்காவது சதத்தை பதிவு செய்துள்ளார்.
லிஸ்ட் ஏ போட்டிகளில் 83 சராசரி வைத்திருக்கும் இவர் 2027 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்குத் தேர்வாகுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.
விஜய் ஹசாரே கோப்பையில் கர்நாடகத்துக்கு எதிரான போட்டியில் திரிபுரா டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி 50 ஓவர்களில் 332-7 ரன்கள் எடுத்தது. இதில் படிக்கல் 108 , அபிநவ் மனோகர் 79 ரன்கள் எடுத்தார்கள்.
அடுத்து விளையாடிய திரிபுரா 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 80 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடகம் வென்றது.
தேவ்தத் படிக்கல் ஆட்ட நாயகன் விருது வென்றார். இந்த சீசனில் 5 விஜய் ஹசாரே போட்டிகளில் 4ஆவது போட்டியைத் தவிர மற்ற அனைத்திலும் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
2026 டி20 உலகக் கோப்பை போட்டியில் இல்லாவிட்டாலும் அடுத்தாண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.