விஜய் ஹசாரே கோப்பையில் அதிக சதங்கள் அடித்தும் இந்திய அணியில் இடம்பெறாமல் இருக்கும் அவலம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தாண்டு ஒருநாள் உலகக் கோப்பை நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியில் மாற்றங்கள் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
விஜய் ஹசாரே கோப்பையில் இதுவரையில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் மகாராஷ்டிராவின் ருதுராஜ் கெய்க்வாட், கரநாடகத்தின் தேவ்தத் படிக்கல் இருக்கிறார்கள்.
இவ்வளவு சாதனைகள் செய்தும் இந்திய ஒருநாள் அணியில் இடம் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருவர் பெயரும் இல்லாதது குறிப்பிடத்தக்கது.
விஜய் ஹசாரே கோப்பையில் அதிக சதங்கள்
15 சதங்கள் - அங்கித் பாவ்னே (92 இன்னிங்ஸ்)
14 சதங்கள் - ருதுராஜ் கெய்க்வாட் (55 இன்னிங்ஸ்)
13 சதங்கள் - தேவ்தத் படிக்கல் (33 இன்னிங்ஸ்)
12 சதங்கள் - மயங்க் அகர்வால் (76 இன்னிங்ஸ்)
11 சதங்கள் - ராபின் உத்தப்பா (79 இன்னிங்ஸ்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.