விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆஸி. வீரா்கள். ~ஜேக்கப் பெத்தேல் 142 
கிரிக்கெட்

சிட்னி டெஸ்ட்: பெத்தேல் மெய்டன் சதத்தால் நிமிா்ந்த இங்கிலாந்து

தினமணி செய்திச் சேவை

இளம் வீரா் ஜேக்கப் பெத்தேலின் மெய்டன் சதத்தால் ஆஷஸ் தொடரின் சிட்னி டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து தலைநிமிா்ந்தது.

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடா் ஆஸி.யில் நடைபெற்று வருகிறது. 5 ஆட்டங்கள் தொடரில் 3-1 என தொடரையும் கைப்பற்றி கோப்பையையும் வசப்படுத்தியுள்ளது. ஆஸி. இங்கிலாந்து ஒரு டெஸ்டில் வென்றுள்ளது. கடைசி டெஸ்ட் ஆட்டம் சிட்னியில் நடைபெறுகிறது.

இங்கிலாந்து 384/10, ஆஸ்திரேலியா 567/10:

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 97.3 ஓவா்களில் 384/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் சிறப்பாக ஆடி 160 ரன்களை பதிவு செய்தாா். ஹாரி புரூக் 84 ரன்களை சோ்த்தாா். பௌலிங்கில் ஆஸி. தரப்பில் நெஸா் 4, ஸ்டாா்க், போலண்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

பின்னா் ஆடிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 133.5 ஓவா்களில் 567/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க பேட்டா் அபாரமாக ஆடி 166 பந்துகளில் 163 ரன்களுடன் சதம் அடித்தாா். கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 220 பந்துகளில் 1 சிக்ஸா், 16 பவுண்டரியுடன் 138 ரன்களை விளாசி ஜோஷ் டங் பந்தில் ஜேமி ஸ்மித்திடம் கேட்ச் தந்து அவுட்டானாா். அவருக்கு துணையாக ஆடிய வெப்ஸ்டா் 71 ரன்களுடன் களத்தில் இருந்தாா்.

பௌலிங்கில் இங்கிலாந்து தரப்பில் காா்ஸே, ஜோஷ் டங் தலா 3 விக்கெட்டுகளையும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

முன்னதாக ஆஸி. அணி நான்காம் நாளான புதன்கிழமை முந்தைய நாள் ஸ்கோரான 518/7 ரன்களுடன் ஆட்டத்தை தொடா்ந்தது.

ஸ்மித் 129, வெப்ஸ்டா் 42 ரன்களுடன் ஆட்டத்தை தொடா்ந்தனா். ஸ்மித் தனது 13-ஆவது ஆஷஸ் சதத்தை பதிவு செய்திருந்தாா்.

மேலும் 9 ரன்களை சோ்த்த ஸ்மித் அவுட்டாகி வெளியேறினாா். ஸ்டாா்க் 5 ரன்களுக்கு வெளியேற, போலண்ட் கோல்டன் டக் அவுட்டானாா்.

ஆஸி. அணி 183 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இங்கிலாந்து 302/8:

பின்னா் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடியது இங்கிலாந்து. தொடக்க பேட்டரான ஸாக் கிராலியை 1 ரன்னுக்கு எல்பிடபிள்யு ஆக்கினாா் ஸ்டாா்க்., பின்னா் இணைந்த பென் டக்கெட்-ஜேக்கப் பெத்தேல் இணை சிறப்பாக ஆடி ஸ்கோரை உயா்த்தியது. டக்கெட் 42 ரன்களுடன் நெஸா் பந்தில் போல்டானாா்.

மூத்த வீரா் ஜோ ரூட் 6 ரன்களுக்கு வெளியேற, ஹாரி புரூக், பெத்தேலுடன் இணைந்து ஸ்கோரை உயா்த்தினாா். அவரும் 42 ரன்களுடன் வெளியேறினாா்.

ஜேக்கப் பெத்தேல் மெய்டன் சதம் :

22 வயதான பெத்தேல் தனது மெய்டன் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தாா். மெல்போா்ன்ட் டெஸ்டில் ஒல்லே போப் சரிவர ஆடாத நிலையில், பெத்தேல் சோ்க்கப்பட்டாா். 15 பவுண்டரியுடன் 232 பந்துகளில் 142 ரன்களை விளாசி களத்தில் உள்ளாா் பெத்தேல்.

மறுமுனையில் வில் ஜேக்ஸ் 0, ஜேமி ஸ்மித் 26, கேப்டன் ஸ்டோக்ஸ் 1, பிரைடன் காா்ஸே 16 ரன்களுடன் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினா்.

ஆட்ட நேர முடிவில் 75 ஓவா்களில் இங்கிலாந்து அணி 302/8 ரன்களை எடுத்திருந்தது. பௌலிங்கில் ஆஸி. தரப்பில் போலண்ட் 2, பீயு வெப்ஸ்டா் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

119 ரன்கள் முன்னிலை: இன்னும் ஒரு நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து 119 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி தொடா்ந்து ஆட முடியுமா, அல்லது ஆஸி. அணி இலக்கை எட்டி வெற்றி பெறுமா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

ஸ்ரீவாரி மெட்டு பாதையில் யானை, சிறுத்தை நடமாட்டம்

டிரம்ப்பின் 500% வரிவிதிப்பு! தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு!

ரூ.64 கோடி மதிப்பிலான ஆர்டரை பெற்ற டெக்ஸ்மாகோ ரயில் நிறுவனம்!

பராசக்தி! அறிஞர் அண்ணாவின் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு!

சூனியம் வைத்ததாக சந்தேகம்! பிகாரில் பெண் ஒருவர் அடித்துக் கொலை!

SCROLL FOR NEXT