முதல் சதம் அடித்த மகிழ்ச்சியில் ஜேக்கப் பெத்தேல்.  படம்: ஏபி
கிரிக்கெட்

தோல்வியின் விளிம்பில் இங்கிலாந்து..! தனியாளாகப் போராடும் ஜேக்கப் பெத்தேல்!

சிட்னி டெஸ்ட்டின் நான்காம் நாள் ஆட்டம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

சிட்னி டெஸ்ட்டின் நான்காம் நாள் ஆட்டம் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 301 ரன்கள் எடுத்துள்ளது.

இதன்மூலம், இரண்டாம் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 119 ரன்கள் முன்னிலை வகித்துள்ளது.

ஆஷஸ் தொடரின் கடைசி போட்டியான சிட்னி டெஸ்ட் கடந்த ஜன.4ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 384 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, ஆஸ்திரேலியா 567க்கு ஆல் அவுட்டானது.

இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிவரும் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 301 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தப் போட்டியில் ஜேக்கப் பெதேல் தனது முதல் சதத்தினை அடித்து 142 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.

ஆஸி. சார்பில் பியூ வெப்ஸ்டர் 3, ஸ்காட் போலண்ட் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

At the end of the fourth day's play in the Sydney Test, England has scored 301 runs for the loss of 8 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறந்த படங்களுக்கான ஆஸ்கர் பட்டியலில் 4 இந்திய படங்கள்!

கோடியக்கரையில் கடல் சீற்றம்: மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!

தவெக தேர்தல் அறிக்கை குழு அறிவிப்பு: செங்கோட்டையனுக்கு இடமில்லை!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

கரூர் பலி: மத்திய உள்துறை அமைச்சகம், தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு!

SCROLL FOR NEXT