ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆஷஸ் கோப்பையின் வெற்றிக் கொண்டாட்டத்தில் பாட் கம்மின்ஸையும் அழைத்து கோப்பையைப் பகிர்ந்து கொண்டார்.
இந்தச் செயல் சமூக வலைதளத்தில் மிகுந்த பாராட்டைப் பெற்று வருகிறது.
4-1 : ஸ்டீவ் ஸ்மித் - கம்மின்ஸ்
முதலிரண்டு போட்டிகளில் பாட் கம்மின்ஸ் காயம் குணமாகாததால் விளையாடாமல் இருந்தார்.
மூன்றாவது போட்டியில் விளையாடிய கம்மின்ஸ் அடுத்த இரண்டு போட்டிகளில் காயம் காரணமாக விளையாடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
மூன்றாவது போட்டியில் ஸ்மித் வெர்டிகோ காரணத்தினால் விளையாடவில்லை. மீதமிருந்த நான்கு போட்டிகளிலும் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்பட்டார்.
5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 4-1 என ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் வென்றது.
வரவேற்பைப் பெறும் ஸ்டீவ் ஸ்மித் செயல்...
பெரும்பாலான போட்டிகளிலும் கேப்டனாக ஸ்மித் இருந்தாலும் கோப்பையை எடுதுக் கொண்டாடுவதில் பாட் கம்மின்ஸ் வரும்வரை காத்திருந்தார்.
பின்னர் இருவரும் சேர்ந்து வெற்றியைக் கொண்டாடினார்கள். அதுமட்டுமில்லாமல் கோப்பையை ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்தச் செயல்களுக்காக ஸ்டீவ் ஸ்மித்தை கிரிக்கெட் ரசிகர்கள் மிகுதியாகப் பாராட்டி வருகிறார்கள்.
கடைசி டெஸ்ட்டின் ஆட்ட நாயகனாக டிராவிஸ் ஹெட்டும் தொடர் நாயகனாக மிட்செல் ஸ்டார்க்கும் தேர்வானார்கள்.
இங்கிலாந்து அணி மீண்டும் ஆஷஸ் கோப்பையை இழந்துள்ளது அந்த நாட்டின் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.