முகப்பு
கிரிக்கெட்

பந்துவீச்சில் அசத்திய நடின் டி கிளர்க்; ஆர்சிபிக்கு 155 ரன்கள் இலக்கு!

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 154 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 9 ஜனவரி 2026, 10:05 pm IST
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆர்சிபி வீராங்கனை நடின் டி கிளர்க் - படம் | மகளிர் பிரீமியர் லீக் (எக்ஸ்)
பகிர்:

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 154 ரன்கள் எடுத்துள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நான்காவது சீசன் இன்று (ஜனவரி 9) தொடங்கியது. நவி மும்பையில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் விளையாடியது.

Advertisement

Advertisement

முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் அதிகபட்சமாக சஞ்சீவன் சஞ்சனா 25 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, நிக்கோலா கேரி 40 ரன்களும், கமலினி 32 ரன்களும் எடுத்தனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தரப்பில் நடின் டி கிளர்க் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். லாரன் பெல் மற்றும் ஷ்ரேயங்கா பாட்டில் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடி வருகிறது.

summary

In the first match of the Women's Premier League series, the Mumbai Indians team, batting first against Royal Challengers Bangalore, scored 154 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.