தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் எஸ்ஏ 20 லீக்கில் டேவிட் மில்லரின் பார்ல் ராயல்ஸ் அணி பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
முதல் போட்டியில் மிக மோசமாகத் தோல்வியுற்ற இந்த அணி தற்போது பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறி, தன்னம்பிக்கைக்குச் சான்றாக விளங்குகிறது.
சோதனை - சாதனை
எஸ்ஏ20 கிரிக்கெட்டில் பார்ல் ராயல்ஸ் அணி தனது முதல் போட்டியிலேயே 49 ரன்களுக்கு ஆட்டமிழந்து மிக மோசமான சாதனையை நிகழ்த்தியது.
பின்னர், அடுத்தடுத்த போட்டிகளில் வென்றது. நேற்றிரவு நடந்த போட்டியில் பிரிடோரியா கேபிடல்ஸ் அணியுடன் மோதியது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பிரிடோரியா கேபிடல்ஸ் 19.1 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பார்ல் ராயல்ஸ் அணியின் சார்பில் ஹார்டிக் விக்கெட் எடுத்த ஓட்னீல் பார்ட்மேன் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
அடுத்து விளையாடிய பார்ல் ராயல்ஸ் அணி 15.21 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து வென்றது.
4 சீசனிலும் பிளே ஆப்ஸ் சென்ற பார்ல் ராயல்ஸ்
இந்த வெற்றியின் மூலமாக இந்த அணி 24 புள்ளிகளுடன் பிளே ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
முதல் போட்டியில் மோசமாகத் தோல்வியுற்ற இந்த அணி தற்போது புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல் போட்டியில் தோல்வியுற்ற பிறகு, டேவிட் மில்லர் மீண்டு வருவோம் எனக் கூறியிருந்தார். அதை செய்தும் காண்பித்து தன்னம்பிக்கைக்குச் சான்றாக விளங்குகிறார்.
பார்ல் ராயல்ஸ் அணி தொடர்ச்சியாக நான்காவது சீசனிலும் பிளேஆப்ஸுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.