மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் முதல் சதமடித்த வீராங்கனையாக, பேட்டிங் ஆல்-ரௌண்டரான நாட் ஷிவெர்-ப்ரண்ட் சாதனை படைத்துள்ளார். வதோதராவில் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிராக பேட்டிங் செய்த அவர், ஒரு சிக்ஸர், 16 பௌண்டரிகளுடன் 57 பந்துகளில் சதம் கடந்தார்.
100 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்த நாட் ஷிவெர்-ப்ரண்ட்டின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்த பெங்களூரு அணி பந்துவீச்சாளர்கள் திணறினர். அவரது அதிரடியால் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 199 ரன்கள் குவித்தது. தொடர்ந்து, ஆர்சிபி சேஸிங்கில் ஈடுபட்டுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த நாட் ஷிவெர்-ப்ரண்ட் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.