இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஐசிசி தரவரிசையில் ஐந்து இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார்.
ஃபார்மில் இல்லாமல் இருந்த சூர்யகுமார் யாதவ் நியூசிலாந்து அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி வருகிறார்.
சமீப காலமாக மோசமாக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் தனது ஃபார்மை மீட்டுள்ளார்.
மூன்றாவது இடத்தினை திலக் வர்மாவுக்கு விட்டுக்கொடுத்ததில் இருந்து ஃபார்மை இழந்த சூர்யகுமார் யாதவ் தற்போது அசத்தலாக விளையாடி வருகிறார்.
இவரது தலைமையில் இந்திய அணி டி20 தொடரையும் 3-0 என வென்றுள்ளது.
கடைசி மூன்று இன்னிங்ஸில் 32, 82*, 57* என சிறப்பாக விளையாடியதால் ஐந்து இடங்கள் முன்னேறி 7-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை
1. அபிஷேக் சர்மா
2. பிலிப் சால்ட்
3. திலக் வர்மா
4. ஜாஸ் பட்லர்
5. சாஹிப்சாதா ஃபர்ஹான்
6. பதும் நிசாங்கா
7. சூர்யகுமார் யாதவ்
8. டிராவிஸ் ஹெட்
9. மிட்செல் மார்ஷ்
10. டிம் செயிஃபெர்ட்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.