ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளார்.
மிட்செல் மார்ஷ் தலைமையிலான 15 பேர் கொண்ட புதிய ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, இலங்கையில் பிப்.7ஆம் தேதி முதல் டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்தப் போட்டிக்கான அணிகளின் விவரங்களை ஜன.31ஆம் தேதிக்குள் இறுதிசெய்ய வேண்டுமென இருந்தது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி தனது முடிவை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக விலகுவதாகவும் அவருக்குப் பதிலாக வேகப் பந்துவீச்சாளர் பென் துவார்ஸுஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸி. அணி:
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், சேவியர் ப்ராட்லெட், கூப்பர் கன்னோலி, டிம் டேவிட், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்லீஷ், மேத்திவ் குஹ்னேமான், க்ளென் மேக்ஸ்வெல், மாட் ரென்ஷா, மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆடம் ஸாம்பா, பென் துவார்ஸுஸ், கேமரூன் கிரீன், நாதன் எல்லீஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.