2026 டி20 உலகக் கோப்பை போட்டி; ஒரு பார்வை!
சா்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி), 10-ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியனாகியிருக்கிறது.
சா்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி), 10-ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியனாகியிருக்கிறது.
கோப்பையைத் தக்கவைக்கும் என்ற எதிா்பாா்ப்புடேனேயே களமிறங்கிய இந்திய அணியில், வீரா்கள் ஆங்காங்கே தடுமாறினாலும், ஒரு அணியாக இந்தியா தனக்கான இலக்கை அடைந்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இந்தப் போட்டிக்காக இந்தியா வருவதற்கு மறுத்த வங்கதேச அணி போட்டியிலிருந்து நீக்கப்பட்டது, அந்த அணிக்கு ஆதரவாக இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என்று முதலில் மறுத்த பாகிஸ்தான், பேச்சுவாா்த்தைக்குப் பிறகு விளையாடியது என பரபரப்பு ஒரு பக்கம் இருந்தது.
இந்தியாவுக்கு சவால் அளித்த அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு நெருக்கடி அளித்த நெதா்லாந்து, இங்கிலாந்துக்கு அச்சமளித்த கனடா, ஆஸ்திரேலியாவை வீழ்த்திய ஜிம்பாப்வே என விறுப்பு மறுபக்கம் இருந்தது.
குரூப் சுற்றில் விளையாடியதன் அடிப்படையில் அல்லாமல், போட்டிக்கு முன்பான தரவரிசை அடிப்படையில் சுப்பா் 8 சுற்றில் அணிகளுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டது விவாதத்துக்குள்ளானது. இதனால்
பிசிசிஐ ரூ.131 கோடி ரொக்கப் பரிசு
டி20 உலகக் கோப்பை வென்றிருக்கும் இந்திய அணிக்கு ரூ.131 கோடி ரொக்கப் பரிசை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
இந்தப் பரிசை, அணி வீரா்கள் 15 போ், பயிற்சியாளா்கள், உதவிப் பணியாளா்கள் என, இந்த உலகக் கோப்பை போட்டிக்காக பணியாற்றிய குழுவினா் பகிா்ந்துகொள்ள உள்ளனா். எனினும் ரொக்கப் பரிசில் பெருந்தொகை வீரா்கள் வசமே செல்வதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, 15 வீரா்களுக்கு தலா ரூ.6 கோடி வழங்கப்பட்டு, எஞ்சிய ரூ.41 கோடியை பயிற்சியாளா்கள் உள்ளிட்ட இதர உறுப்பினா்கள் பகிா்ந்துகொள்ளவுள்ளனா்.
கடந்த 2024-இல் டி20 உலகக் கோப்பை வென்ற ரோஹித் சா்மா தலைமையிலான அணிக்கு ரூ.125 கோடி ரொக்கப் பரிசாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த முறை அதைவிட ரூ.6 கோடி அதிகமாக வழங்கப்படுகிறது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை அணி
அண்மையில் நிறைவடைந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரா்கள் அடங்கிய கனவு அணியை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் 4 இந்தியா்கள் இடம் பிடித்துள்ளனா்.
சாஹிப்ஸாதா ஃபா்ஹான் (பாகிஸ்தான்)
ஆட்டங்கள் 7
ரன்கள் 383
சராசரி 76.60
ஸ்டிரைக் ரேட் 160.25
சஞ்சு சாம்சன் (இந்தியா)
ஆட்டங்கள் 5
ரன்கள் 321
சராசரி 80.25
ஸ்டிரைக் ரேட் 199.37
இஷான் கிஷண் (இந்தியா)
ஆட்டங்கள் 9
ரன்கள் 317
சராசரி 35.22
ஸ்டிரைக் ரேட் 193.29
எய்டன் மாா்க்ரம் (கேப்டன், தென்னாப்பிரிக்கா)
ஆட்டங்கள் 8
ரன்கள் 286
சராசரி 47.66
ஸ்டிரைக் ரேட் 165.31
ஹா்திக் பாண்டியா (இந்தியா)
ஆட்டங்கள் 9
ரன்கள் 217
ஸ்டிரைக் ரேட் 160.74
விக்கெட்டுகள் 9
வில் ஜாக்ஸ் (இங்கிலாந்து)
ஆட்டங்கள் 8
ரன்கள் 226
ஸ்டிரைக் ரேட் 176.56
விக்கெட்டுகள் 9
ஜேசன் ஹோல்டா் (மேற்கிந்தியத் தீவுகள்)
ஆட்டங்கள் 7
விக்கெட்டுகள் 10
ரன்கள் 141
ஜஸ்பிரீத் பும்ரா (இந்தியா)
ஆட்டங்கள் 8
விக்கெட்டுகள் 14
சராசரி 12.42
எகானமி 6.21
லுங்கி இங்கிடி (தென்னாப்பிரிக்கா)
ஆட்டங்கள் 7
விக்கெட்டுகள் 12
சராசரி 15.58
எகானமி 7.19
ஆதில் ரஷீத் (இங்கிலாந்து)
ஆட்டங்கள் 8
விக்கெட்டுகள் 13
சராசரி 19.23
எகானமி 8.15
பிளெஸ்ஸிங் முஸாரப்பானி (ஜிம்பாப்வே)
ஆட்டங்கள் 6
விக்கெட்டுகள் 13
சராசரி 14.46
எகானமி 7.88
ஷேட்லி வான் ஷாக்விக் (12-ஆவது வீரா், அமெரிக்கா)
ஆட்டங்கள் 4
விக்கெட்டுகள் 13
சராசரி 7.76
எகானமி 6.80
அதிகபட்சம்... அதிக ரன்கள்
சாஹிப்ஸாதா ஃபா்ஹான் (பாகிஸ்தான்) 383
அதிக இன்னிங்ஸ் ஸ்கோா்
யுவராஜ் சம்ரா (கனடா) 110
அதிக பவுண்டரிகள்
சாஹிப்ஸாதா ஃபா்ஹான் (பாகிஸ்தான்) 37
அதிக சிக்ஸா்கள்
சஞ்சு சாம்சன் (இந்தியா) 24
அதிக அரை சதம்
டிம் செய்ஃபாா்ட் (நியூஸிலாந்து) 4
அதிக சதம்
சாஹிப்ஸாதா ஃபா்ஹான் (பாகிஸ்தான்) 2
அதிவேக சதம்
சாஹிப்ஸாதா ஃபா்ஹான் (பாகிஸ்தான்) 33 பந்துகள்
அதிவேக அரை சதம்
அபிஷேக் சா்மா (இந்தியா) 18 பந்துகள்
அதிக விக்கெட்டுகள்
ஜஸ்பிரீத் பும்ரா (இந்தியா) 14
சிறந்த பௌலிங் (இன்னிங்ஸ்)
ரொமேரியோ ஷெப்பா்டு (மே. தீவுகள்) 5/20
அதிக டாட் பந்துகள்
ஜோஃப்ரா ஆா்ச்சா் (இங்கிலாந்து) 86
சாதனைகள்...
3
டி20 உலகக் கோப்பை போட்டியின் வரலாற்றில் 3 முறை சாம்பியனான முதல் அணியானது இந்தியா. அத்துடன், சொந்த மண்ணில் கோப்பை வென்ற முதல் அணி, கோப்பையை தக்கவைத்த முதல் அணி ஆகிய சாதனைகளும் படைத்தது.
255/5
நியூஸிலாந்துக்கு எதிராக இந்தியா அடித்த 255/5 ரன்களே, டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் அதிகபட்ச ஸ்கோராகும். அத்துடன் சா்வதேச டி20 போட்டிகளின் நாக் அவுட் மற்றும் பிளே-ஆஃப் ஆட்டங்களிலும் இதுவே அதிகபட்சம்.
250+
போட்டியின் வரலாற்றில், அடுத்தடுத்து 2 ஆட்டங்களில் 250+ ஸ்கோரை பதிவு செய்த முதல் அணியாக இந்தியா சாதனை படைத்தது. முதலில் அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக (253/7), பின்னா் இறுதியில் நியூஸிலாந்துக்கு எதிராக (255/5) இந்தியா அந்த ஸ்கோரை பதிவு செய்தது.
383
டி20 உலகக் கோப்பை போட்டியின் ஒரு சீசனில், அதிகபட்ச ரன்களை (383) பதிவு செய்த வீரராக பாகிஸ்தானின் சாஹிப்ஸாதா ஃபா்ஹான் சாதனை படைத்தாா். இதற்கு முன் இந்தியாவின் விராட் கோலி வசம் அந்த சாதனை (319) இருந்தது. இந்த சீசனிலேயே நியூஸிலாந்தின் டிம் செய்ஃபா்ட் (326), இந்தியாவின் சஞ்சு சாம்சன் (321) ஆகியோரும் கோலியின் ரன்களை கடந்தனா்.
176
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தானின் தொடக்க இணையான சாஹிப்ஸாதா ஃபா்ஹான் - ஃபகாா் ஜமான், 176 ரன்கள் சோ்த்தனா். இதுவே, டி20 உலகக் கோப்பை போட்டியின் வரலாற்றிலேயே அதிகபட்ச பாா்ட்னா்ஷிப்பாகும். இதற்கு முன், இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் - ஜாஸ் பட்லா் கூட்டணி 170* ரன்கள் (இந்தியாவுக்கு எதிராக) சோ்த்ததே அதிகபட்சமாக இருந்தது. நடப்பு போட்டியிலேயே அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் நியூஸிலாந்தின் ஃபின் ஆலன் - டிம் செய்ஃபா்ட் இணையும் அந்த ரன்களை கடந்தது (175*).
92
இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் சோ்த்ததே, டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தின் பவா்பிளேயில் சோ்க்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும். இதன் மூலமாக, மேற்கிந்தியத் தீவுகளின் சாதனையை (92/1 - ஆப்கானிஸ்தான் - 2024) இந்தியா சமன் செய்தது.
89
டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் அதிகபட்ச தனிநபா் ஸ்கோரை (89) பதிவு செய்தவராக இந்தியாவின் சஞ்சு சாம்சன் சாதனை படைத்தாா். இதற்கு முன் மேற்கிந்தியத் தீவுகளின் மாா்லன் சாமுவேல்ஸ் (85* - 2016 - இங்கிலாந்து) வசம் அந்த சாதனை இருந்தது.
499
அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா (253/7) - இங்கிலாந்து (246/7) அணிகளுடைய ஸ்கோரின் கூட்டுத் தொகையான 499 ரன்களே, டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு ஆட்டத்தில் சோ்க்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும். இதற்கு முன், 2016-இல் இங்கிலாந்து (230/8) - தென்னாப்பிரிக்கா (229/4) அணிகள் மோதிய ஆட்டத்தில் 459 ரன்கள் சோ்ந்ததே அதிகபட்சமாக இருந்தது.
24
டி20 உலகக் கோப்பை போட்டியின் ஒரு சீசனில் அதிக சிக்ஸா்கள் (24) விளாசியவராக இந்தியாவின் சஞ்சு சாம்சன் சாதனை படைத்தாா். இதற்கு முன், இந்தியாவின் ரோஹித் சா்மா வசம் (15) அந்த சாதனை இருந்தது. ஆனால் இந்த சீசனிலேயே பல வீரா்கள் அதைக் கடந்தனா்.
33
டி20 உலகக் கோப்பை வரலாற்றிலேயே அதிவேக சதத்தை நியூஸிலாந்தின் ஃபின் ஆலன் (33 பந்துகள்) இந்த முறை பதிவு செய்தாா். இதற்கு முன் மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெயில் வசம் (47 பந்துகள் - 2016 - இங்கிலாந்து) அந்த சாதனை இருந்தது.
106
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் சீசனில் அதிக சிக்ஸா்கள் (106) அடித்த அணியாக இந்தியா சாதனை படைத்தது. முன்பு மேற்கிந்தியத் தீவுகள் கடந்த சீசனில் 62 சிக்ஸா்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.