முகப்பு
கிரிக்கெட்

சிஎஸ்கேவுக்கு இப்படியொரு அடியா..! முதல் ஆட்டத்தில் படுதோல்வி!

ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!

Updated On : 30 மார்ச், 2026 at 5:13 PM
ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜடேஜா - @IPL
பகிர்:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2026-ஆம் ஆண்டு சீசன் கடந்த சனிக்கிழமை ஆரம்பமானது. சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) தனது முதல் ஆட்டத்தில் இன்று(மார்ச் 30) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை குவாஹாட்டியில் சந்தித்தது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே ரன் திரட்ட தடுமாறியதைப் பார்த்த சென்னை அணியின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். சிஎஸ்கே வீரர்கள் ஆட்டத்திறனைப் பார்த்ததும், முதல் பாதியிலேயே ஆட்டத்தின் முடிவு ஏறத்தாழ கணிக்கப்பட்டுவிட்டது என்றே சொல்லலாம்.

சிஎஸ்கே நிர்ணயித்த 128 ரன்கள் இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 12.1 ஓவர்களிலேயே 128 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.

summary

Rajasthan Royals won by 8 wkts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.