ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!
சிஎஸ்கே ஆல்-ரவுண்டர் ஜேமி ஓவர்டன் விலகல் பற்றி...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டரான இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜேமி ஓவர்டன் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்விகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது.
தொடர் தோல்விகளால் துவண்டிருந்த சென்னை அணி சமீபத்திய வெற்றிகளால் மீண்டும் ஃபிளே ஆப் சுற்றை நோக்கி முன்னேறி வருகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய ஆல்-ரவுண்டரான ஜேமி ஓவர்டனுக்கு வலது தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் சிகிச்சைக்காக லண்டன் திரும்பவுள்ளதாகவும், தொடரில் இருந்து விலகுவதாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அடுத்த 3 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உறுதியாகும் என்ற சூழலில் ஓவர்டனின் விலகல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தொடரில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள ஓவர்டன் 136 ரன்கள் குவித்துள்ளார். 14 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
ஏற்கெனவே சென்னை அணியின் இளம் வீரர்களான தொடக்க ஆட்டக்காரர் ஆயுஷ் மாத்ரே, ஆல்-ரவுண்டர் ராமகிருஷ்ண கோஷு ஆகியோர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
Jamie Overton out of tournament Another Setback for CSK
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.