முகப்பு
கிரிக்கெட்

ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள்: ஆட்டத்தை மாற்றிய ஜேமி ஓவர்டன்!

அசத்தலாக பந்துவீசிய சிஎஸ்கேவின் ஜேமி ஓவர்டன் குறித்து...

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஜேமி ஓவர்டன். - படம்: எக்ஸ் / ஐபிஎல்
பகிர்:

லக்னௌ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் எடுத்து ஜேமி ஓவர்டன் ஆட்டத்தை மாற்றினார்.

சேப்பாக்கத்தில் நடைபெற்றுவரும் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பவர்பிளேவில் அதிரடியாக விளையாடிய ஜோஷ் இங்லீஷ் 17 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

பவர்பிளே முடிவில் லக்னௌ அணி 91/1 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர், 9.1ஆவது ஓவரில் ஜேமி ஓவர்டன் வீசிய பந்தில் 85 ரன்கள் எடுத்திருந்த இங்லீஷ் ஆட்டமிழந்தார்.

Advertisement

Advertisement

இதே ஓவரில் 9.4ஆவது ஓவரில் ஜேமி ஓவர்டன் வீசிய பந்தில் ரிஷப் பந்த் போல்ட் ஆனார். 10 ஓவர்களில் 117/4 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது, மார்க்ரம் - ரகுவன்ஷி விளையாடி வருகிறார்கள்.

இந்த சீசன் முழுவதும் சிஎஸ்கே அணிக்கு விக்கெட் தேவைப்படும்போதெல்லாம் ஓவர்டன் விக்கெட் வீழ்த்தியிருக்கிறார்.

சிஎஸ்கே ரசிகர்கள் அவரை சமூக வலைதளத்தில், “தேவதூதன்” எனக் கூறிவருகிறார்கள்.

summary

Jamie Overton Changes the Game! Two Wickets in a Single Over!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments