FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஐஆம் கேம் கதையைக் கேட்டதும் நடிக்க ஒப்புக்கொண்டேன்: சம்யுக்தா விஸ்வநாதன்

ஐஆம் கேம் குறித்து பேசிய சம்யுக்தா விஸ்வநாதன்...

2 செப்டம்பர் 2026, 3:46 pm IST
சம்யுக்தா விஸ்வநாதன்
பகிர்:

நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் ஐஆம் கேம் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவான ஐஆம் கேம் திரைப்படத்தின் முன்வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நேற்று (செப். 1) நடைபெற்றது.

இதில், கலந்துகொண்ட நடிகை சம்யுக்தா விஸ்வநாதன், “சிறு வயதிலிருந்தே சினிமாவை ரசித்து வளர்ந்த எனக்கு, ஒரு படம் பார்க்கும்போது ஏற்படும் உணர்வும் தாக்கமும் மிகவும் முக்கியம். அந்த வகையில், ஐஆம் கேம் படத்தின் கதையை இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் முதன்முறையாக கூறியபோதே, இதில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று உடனடியாக முடிவு செய்தேன்.

Advertisement

Advertisement

இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானதாகவும், எனது மனதைத் தொட்டதாகவும் இருந்தது. படப்பிடிப்பின்போது குறிப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்ற நீண்டகட்ட படப்பிடிப்பில் எனக்கு ஒரு சிறந்த பயிற்சியைப் போன்ற அனுபவமாக அமைந்தது. ஒரு காட்சிக்குத் தேவையான உணர்வை மிகக் குறுகிய நேரத்தில் வெளிப்படுத்த வேண்டியிருந்தது சவாலாக இருந்தாலும், அது நடிப்பில் எனக்கு நிறைய கற்றுத்தந்தது. நடிகர் துல்கர் சல்மானைச் சந்தித்ததும் அவருடன் நடித்ததும் மறக்க முடியாத அனுபவம்.

படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும், படப்பிடிப்பு முடிவில் அனைவரும் ஒரு குடும்பமாக மாறிவிட்டோம். டிரைலரில் சில கதாபாத்திரங்களையே ரசிகர்கள் பார்த்திருப்பார்கள்; ஆனால் முழுப் படத்தைப் பார்க்கும்போது இந்தப் படக்குழுவின் ஒற்றுமையும் உழைப்பும் ரசிகர்களுக்குப் புரியும்” என்றார்.

Actress Samyuktha Viswanathan has spoken about the film I Am Game.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments