ஆபாசமாகப் பேசிய ரிஷப் பந்த்..! சமூக வலைதளத்தில் கடும் விமர்சனங்கள்!
தோல்விக்குப் பிறகு லக்னௌ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பேசியது குறித்து...
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியுற்ற பிறகு லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷ்ப் பந்த் பேசியது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.
நேற்றிரவு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முதலில் விளையாடிய லக்னௌ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் சேர்க்க, அடுத்து விளையாடிய ராஜஸ்தான் 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 225 ரன்கள் எடுத்து வென்றது.
இந்தப் போட்டியில் ரிஷப் பந்த் 23 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்தார். ஏற்கெனவே தொடரிலிருந்து வெளியேறினாலும் இந்தப் போட்டியில் 220 ரன்கள் எடுத்தும் தோல்வியுற்றது பேசுபொருளாகியுள்ளது.
Advertisement
Advertisement
தோல்விக்குப் பிறகு பேசிய லக்னௌ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் ஆபாசமாகப் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஆங்கிலத்தில் எஃப் என்ற எழுத்தில் தொடங்கும் ஆபாசமான வார்த்தையை உபயோகித்த ரிஷப் பந்த் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
போட்டிக்குப் பிறகு ரிஷப் பந்த், “புள்ளிப் பட்டியலோ அல்லது நாங்கள் தற்போது இருக்கும் சூழ்நிலையோ எதுவாக இருந்தாலும் நாங்கள் ஒரு அணியாகப் பெருமைப்படுகிறோம். இந்த அணி மீது நம்பிக்கையாக இருக்கிறோம்.
இந்தப் போட்டியில் தோல்வியுற்றாலும் நாங்கள் (எஃப் என்ற எழுத்தில் தொடங்கும் ஆபாசமான வார்த்தை) நல்ல அணி என்பதில் மாற்றுக்கருத்தில்லை” என்றார்.
We are fucking good team controversy eruputs for Rishabh Pant last night speech
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.