ஐபிஎல்

ஐபிஎல் பவுலிங்: யார் டாப்? யார் மோசம்?

இந்த ஐபிஎல்-லில் இதுவரை குறைந்தளவு மற்றும் அதிகளவு ரன்கள் கொடுத்த பவுலர்கள் யார் யார்?

சநகன்

டி20 போட்டியில் குறைந்தளவு ரன் கொடுக்கிற பவுலர்களுக்குத்தான் அதிக மதிப்பு. ஆல் அவுட் செய்யவேண்டும் என்று அவசியமில்லை. ரன்களைக் கட்டுப்படுத்தினாலே ஒரு அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.

இந்த ஐபிஎல்-லில் இதுவரை குறைந்தளவு மற்றும் அதிகளவு ரன்கள் கொடுத்த பவுலர்கள் யார் யார்?

குறைந்த ரன் விகிதம்

குறைந்தளவு ரன்கள் கொடுத்த பவுலர்களில் முரளி விஜய் தான் முதலிடத்தில் உள்ளார். ரன் விகிதம் 5.33. ஆனால் அவர் ஒரு மேட்சில் மட்டுமே பவுலிங் செய்துள்ளார். 3 ஓவர்கள். அதனால் அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம். 

குறைந்தபட்சம் 10 ஓவர்கள் வீசிய பவுலர்கள் என்கிற அளவில், குறைந்த ரன் விகிதம் (5.50) கொண்ட பவுலர், பெங்களுர் அணியைச் சேர்ந்த மிட்செல் ஸ்டார்க். அடுத்த 2-ம் இடத்தில் சென்னையின் நெஹ்ரா உள்ளார். இதுவரை ஆடிய 6 மேட்சுகளிலும்  அவர் தன்னுடைய நான்கு ஓவர்களை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளார். 5.70 ரன் விகிதம்.

வீரர்கள்

ஆட்டம்

ரன் விகிதம்

விக்கெட்டுகள்

1. மிட்செல் ஸ்டார்க் (பெங்களூர்)

3

5.50

7

2. ஆஷிஷ் நெஹ்ரா (சென்னை)

6

5.70

12

3. சந்தீப் சர்மா (பஞ்சாப்)

7

6.35

9

4. தவல் குல்கர்னி (ராஜஸ்தான்)

5

6.35

4

5. புவனேஷ்வர் குமார் (ஹைதராபாத்)

7

6.70

9

அதிக ரன் விகிதம்

முரளி விஜய் போல ஒரே மேட்சில் மட்டும் பவுலிங் செய்த இஷாந்த் சர்மா 3 ஓவர்கள் வீசி 46 ரன்களைக் கொடுத்துள்ளார். ரன் விகிதம் 15.33! 

அதே 10 ஓவர்களைக் குறைந்தபட்சத் தகுதியாக வைத்துக்கொண்டால், முதலிடம் பிடிப்பவர், மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த ஜஸ்பிரித் பும்ரா. ரன் விகிதம் 12.00. அடுத்த இடத்தில் பெங்களூர் அணியின் அபு நசீம். 10.66. அதிக ரன் கொடுத்தவர்களால் அதிக விக்கெட்டுகளையும் எடுக்கமுடிவதில்லை என்பது தெரிகிறது.

வீரர்கள்

ஆட்டம்

ரன் விகிதம்

விக்கெட்டுகள்

1. ஜஸ்பிரித் பும்ரா (மும்பை)

3

12.00

3

2. அபு நசிம் (பெங்களூர்)

3

10.66

1

3. வருண் ஆரோன் (பெங்களூர்)

4

9.65

3

4. பவன் சுயல் (மும்பை)

3

9.50

0

5. ஜேம்ஸ் ஃபாக்னர் (ராஜஸ்தான்)

7

9.30

4

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT