ஐபிஎல்

அஸ்வின் நடுவிரலில் காயம். சிஎஸ்கேவுக்குப் புது சிக்கல்!

அஸ்வின் நடுவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். எத்தனை தையல்கள் போடவேண்டும் என்று எங்களுக்கு தெரியாது.

சநகன்

நேற்று சென்னையில் நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சிஎஸ்கேவின் அடுத்த சில போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்றைய மேட்சின் கொல்கத்தா இன்னிங்ஸில், 12-வது ஓவரில், கவர் பகுதியில் அஸ்வின் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தபோது சூர்யகுமார் யாதவ் அடித்த ஷாட்டை கேட்ச் பிடிக்க முயன்றார். அது வேகமாக அவருடைய நடுவிரலைத் தாக்கியது.

கேட்ச் டிராப் ஆனாலும், நடுவிரலில் இருந்து ரத்தம் வர ஆரம்பித்தது. இதனால் உடனே பெவிலியனுக்குத் திரும்பி முதலுதவி மேற்கொண்டார் அஸ்வின். பெரிய காயம் என்பதால் அவரால் அதன்பிறகு மேட்சில் கலந்துகொள்ள முடியவில்லை.

நேற்றைய மேட்சில் சென்னை அணி ஜெயித்ததற்கு அஸ்வின் முக்கிய காரணம். முதல் 5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 52 ரன்களைக் குவித்து கொல்கத்தா அணி வலுவான நிலையில் இருந்தது. 6-வது ஓவரை வீசவந்த அஸ்வின், முதல் பந்திலேயே அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த உத்தப்பாவின் விக்கெட்டை எடுத்தார். தன்னுடைய அடுத்த ஓவரின் முதல் பந்திலும் மனிஷ் பாண்டேவின் விக்கெட்டை வீழ்த்தினார். 2 ஓவர்களில் 5 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்திருந்தார் அஸ்வின். இதன்பிறகு சென்னை அணி புது உற்சாகத்துடன் ஆடி, 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

காயம் காரணமாக பெவிலியன் திரும்பிய அஸ்வின் மீண்டும் வந்து பவுலிங் செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் டக்அவுட்டில் அமர்ந்து மேட்ச்சைப் பார்த்துக்கொண்டிருந்தாரே தவிர மைதானத்துக்குள் நுழையவில்லை. மேட்ச் முடிந்தபிறகுதான் அஸ்வினின் காயம் பற்றிய தகவல் செய்தியாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

அஸ்வின் நடுவிரலில் காயம் ஏற்பட்டுள்ளதால், அதன் காரணமாக அடுத்து வரும்  இரண்டு போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்று சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

"அஸ்வின் நடுவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். எத்தனை தையல்கள் போடவேண்டும் என்று எங்களுக்கு தெரியாது. எனவே அடுத்த இரண்டு போட்டிகளில் அவருக்கு ஓய்வு அளிக்க திட்டமிட்டுள்ளோம்."  என்றார் சிஎஸ்கேவின் மேலாளர் ரஸல் ராதாகிருஷ்ணன்.

சென்னை அணியின் அடுத்த 2 மேட்சுகளும் வெளியூரில் நடக்க உள்ளது. ஏப்ரல் 30-ம் தேதி கொல்கத்தாவையும், மே 2-ம் தேதி ஹைதராபாத்தையும் சந்திக்கிறது. இந்த இரு போட்டிகளிலும் அஸ்வின் கலந்துகொள்ள மாட்டார். மே 4-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் அஸ்வின் பங்கேற்க வாய்ப்புண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT