முகப்பு
ஐபிஎல்

உலக கோப்பைக்கு ரோஹித்தை கேப்டனாக்குங்கள்: நெட்டிசன்கள் குமுறல்

உலக கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை வைக்க தொடங்கியுள்ளனர்.

Updated On : 7 ஏப்ரல், 2019 at 7:34 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 1:05 PM

உலக கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை வைக்க தொடங்கியுள்ளனர்.

2019 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி உள்ளார். ஆனால், அந்த அணி இதுவரை விளையாடியுள்ள முதல் 6 ஆட்டங்களிலும் படுதோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இந்நிலையில், உலக கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் பரவலாக பதிவிட்டு வருகின்றனர். 

Advertisement

விராட் கோலி, உலகிலேயே சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும், தேவையற்ற ஆக்ரோஷத்துடன் செயல்படுவதாகவும், வேகம் இருக்கும் அளவுக்கு விவேகம் இல்லை எனவும், இதனால் விராட் கோலியின் கேப்டன் பதவியின் மீதான நம்பகத்தன்மை குறைந்து வருவதாகவும் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றனர். 

மேலும களத்தில் துரிதமாகவும், அமைதியுடனும் செயல்படும் தன்மை விராட் கோலிக்கு கிடையாது, ஆனால் அதில் ரோஹித் ஷர்மா சிறந்தவர். எனவே உலக கோப்பை அணிக்கு தயவு செய்து விராட் கோலியை நீக்கிவிட்டு ரோஹித் ஷர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.