ஐபிஎல்

திருப்புமுனையை உருவாக்குவாரா?: டேல் ஸ்டெயினைத் தேர்வு செய்த ஆர்சிபி!

ஆர்சிபி அணி, ஏப்ரல் 13 அன்று பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடவுள்ளது...

எழில்

2008 முதல் 2010 வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடிய தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் கடைசியாக 2016-ல் ஐபிஎல்-லில் விளையாடினார். 

2017 ஐபிஎல் ஏலத்தில் காயம் காரணமாக அவருடைய பெயர் இடம்பெறவில்லை. 2018, 2019 ஐபிஎல் ஏலங்களில் எந்த அணியும் ஸ்டெயினைத் தேர்வு செய்யவில்லை.

இந்நிலையில் இந்த ஐபிஎல் போட்டியில் இதுவரை விளையாடிய ஆறு ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ள ஆர்சிபி அணி ஆஸ்திரேலியாவின் கோல்டர் நைலுக்குப் பதிலாக ஸ்டெயினைத் தற்போது தேர்வு செய்துள்ளது. காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார் கோல்டர் நைல். ஸ்டெயினின் வரவு ஆர்சிபி அணிக்குப் புதிய மறுமலர்ச்சியை உண்டாக்குமா என்பது இனிமேல் தான் தெரியவரும். 

ஆர்சிபி அணி, ஏப்ரல் 13 அன்று பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூரில் பரவலாக மழை

தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம்

’வன்னியா் சங்க கட்டடம் இப்போதுள்ள நிலையே தொடரலாம்’: உச்சநீதிமன்றம் உத்தரவு

பூட்டிய வீட்டில் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு

அரசுப் பேருந்து சேதம்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT