2019-ஆம் ஆண்டு 12-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் 30-ஆவது லீக் ஆட்டம் ஹைதராபாத் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இதில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத், தில்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்ஸன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய தில்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 45, காலின் முன்ரோ 40 ரன்கள் சேர்த்தனர்.
சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் தரப்பில் கலீல் அகமது 3 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.