முகப்பு
ஐபிஎல்

கொல்கத்தா ஐபிஎல் அணியில் இரு புதிய வீரர்கள் சேர்ப்பு!

கேரளாவைச் சேர்ந்த சந்தீப் வாரியர் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த கரியப்பா ஆகிய இருவரையும்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:24 AM
கரியப்பா
பகிர்:

யு-19 உலகக் கோப்பை மூலமாகக் கவனம் பெற்ற இளம் வீரர்களான கமலேஷ் நாகர்கோடி, ஷிவம் மவி ஆகிய இரு வேகப்பந்துவீச்சாளர்களும் காயம் காரணமாக இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த நாகர்கோடி கடந்த வருட ஐபிஎல் போட்டியிலும் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் சமீபகாலமாக ராஜஸ்தான் அணிக்காக விளையாடாத நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து நாகர்கோடி விலகியுள்ளார்.

கொல்கத்தா அணியைச் சேர்ந்த ஷிவம் மவியும் காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து கேரளாவைச் சேர்ந்த சந்தீப் வாரியர் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த கரியப்பா ஆகிய இருவரையும் கொல்கத்தா அணி தேர்வு செய்துள்ளது.

கரியப்பா, ஏற்கெனவே 2015-ல் கேகேஆர் அணிக்காக விளையாடினார். அதற்கு அடுத்த வருடம் அவரை பஞ்சாப் அணி தேர்வு செய்தது. ஐபிஎல் ஏலத்தில் வாரியரை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. ரஞ்சிப் போட்டியில் 10 ஆட்டங்களில் 44 விக்கெட்டுகளை எடுத்தார். சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் ஆந்திராவுக்கு எதிராக ஹாட்ரிக் எடுத்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →