ஐபிஎல்

தோனியின் ரன்-அவுட் தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது: சச்சின் டெண்டுல்கர்

தோனியின் ரன்-அவுட் தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியதாக மும்பை இந்தியன்ஸ் தூதர் சச்சின் டெண்டுல்கர் கூறினார்.

Raghavendran

2019-ஆம் ஆண்டு 12-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. மிகவும் பரபரப்புடன் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கடைசி பந்தில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்று 4-ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. 

இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் தூதர் சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது:

இந்த ஆட்டத்தை லசித் மலிங்கா மிகவும் சிறப்புடன் முடித்து வைத்தார். ஒரு முனையில் க்ருணால் பாண்டியா ரன்களை வாரி வழங்கினாலும், மறுமுனையில் ஜஸ்ப்ரீத் பும்ரா சிறப்பாக பந்துவீசி எதிரணியை கட்டுப்படுத்தினார். பும்ராவின் பந்துவீச்சு மிகவும் சிறப்பானதாக அமைந்தது. 

நாங்கள் கடைசியாக ஆடிய இரண்டு இறுதி ஆட்டங்களும் மிகவும் சிறப்பானதாக அமைந்தது. குறிப்பாக குறைந்தபட்ச வெற்றி இலக்கை நிர்ணயித்தாலும், எதிரணியை திறம்பட கட்டுப்படுத்தியுள்ளோம். மும்பை அணியில் அனுபவ மற்றும் இளம் வீரர்கள் சரிவர அமைந்துள்ளது எங்களுக்கு கூடுதல் பலமாக உள்ளது. 

சுழற்பந்துவீச்சாளர்கள் நன்கு பந்துவீசினர், ஹார்த்திக் பாண்டியாவின் ஆட்டமும் நல்ல முறையில் அமைந்திருந்தது. 6-ஆவது ஓவரில் இருந்து 15-ஆவது ஓவர் வரையிலான காலகட்டம் தான் இந்த ஆட்டத்தில் மிகவும் முக்கியமானதாக இருந்தது. 

அதிலும் தோனியின் ரன்-அவுட் தான் ஆட்ட்தின் போக்கையே மாற்றியது என்று தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானிசாகர் அணை நீர் மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

SCROLL FOR NEXT