தல தல தான்: தோனியை ஆட்டமிழக்கச் செய்த வருண் சக்கரவர்த்தி புகழாரம்
ஆட்டம் முடிந்த பிறகு தோனியுடன் இணைந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்...
ஐபிஎல்தல தல தான்: தோனியை ஆட்டமிழக்கச் செய்த வருண் சக்கரவர்த்தி புகழாரம்
ஆட்டம் முடிந்த பிறகு தோனியுடன் இணைந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்...
சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் தோனியை போல்ட் செய்து ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்தியவர் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வீரர் வருண் சக்கரவர்த்தி.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 21-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.
அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சென்னை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களே எடுத்தது.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 3-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது கொல்கத்தா அணி. சென்னை அணி 5-ம் இடத்தில் உள்ளது.
இந்த ஆட்டத்தில் 11 ரன்களில் தோனியை போல்ட் செய்து வெளியேற்றினார் வருண் சக்கரவர்த்தி. தமிழகத்தைச் சேர்ந்த வருண், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் விளையாடி வருகிறார். ஆட்டம் முடிந்த பிறகு அவர் பேசியதாவது:
மூன்று வருடங்களுக்கு முன்பு தோனியின் பேட்டிங்கைப் பார்ப்பதற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வந்து கிரிக்கெட் ஆட்டங்களைப் பார்ப்பேன். இப்போது அவருக்கு எதிராகப் பந்துவீசியுள்ளேன். இது நம்பமுடியாத தருணம். நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு தோனியுடன் இணைந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். தல தல தான் என்றார்.