முகப்பு
ஐபிஎல்

சிஎஸ்கே அணியில் விளையாடுவதை அரசாங்க வேலை போல சில வீரர்கள் எண்ணுகிறார்கள்: சேவாக் சாடல்

சிஎஸ்கே அணியில் விளையாடுவதை அரசாங்க வேலை போல சில வீரர்கள் எண்ணுகிறார்கள்.

ஐபிஎல்

சிஎஸ்கே அணியில் விளையாடுவதை அரசாங்க வேலை போல சில வீரர்கள் எண்ணுகிறார்கள்: சேவாக் சாடல்

சிஎஸ்கே அணியில் விளையாடுவதை அரசாங்க வேலை போல சில வீரர்கள் எண்ணுகிறார்கள்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:35 PM
பகிர்:

சரியாக விளையாடா விட்டாலும் எப்படியும் தங்களுக்குச் சம்பளம் வந்துவிடும் என சில சிஎஸ்கே வீரர்கள் எண்ணுவதாக முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார். 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 21-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. 

அபுதாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சென்னை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களே எடுத்தது. 

இந்நிலையில் சிஎஸ்கே அணி வீரர்கள் பற்றி ஒரு பேட்டியில் சேவாக் கூறியதாவது:

அந்த இலக்கை சிஎஸ்கே வீரர்கள் விரட்டியிருக்க வேண்டும். ஆனால் கெதர் ஜாதவும் ஜடேஜாவும் பந்துகளை வீணடித்து ரன்கள் எடுக்காமல் இருந்ததால் தோல்வி ஏற்பட்டுள்ளது.

என்னுடைய பார்வையில் சிஎஸ்கே அணியில் விளையாடுவதை அரசாங்க வேலை போல சில வீரர்கள் எண்ணுகிறார்கள். விளையாடுகிறோமோ இல்லையோ எப்படியும் தங்களுக்குச் சம்பளம் வந்துவிடும் என்பது அவர்களுக்குத் தெரியும் என்று கூறியுள்ளார்.

ஆறு ஆட்டங்களில் நான்கில் தோல்வி கண்டுள்ள சிஎஸ்கே அணி, 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6-ம் இடத்தில் உள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →