முகப்பு
ஐபிஎல்

ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் மஞ்சள் நிறத்தில் வீட்டை மாற்றிய சிஎஸ்கே ரசிகர்

தனது வீட்டுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் சிஎஸ்கேவின் மஞ்சள் வண்ணத்தைப் பூசி...

ஐபிஎல்

ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் மஞ்சள் நிறத்தில் வீட்டை மாற்றிய சிஎஸ்கே ரசிகர்

தனது வீட்டுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் சிஎஸ்கேவின் மஞ்சள் வண்ணத்தைப் பூசி...

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:37 PM
பகிர்:

சிஎஸ்கே ரசிகர்கள் தங்கள் அணி மீது வைத்திருக்கும் பாசத்தை அளவிடவே முடியாது. அப்படியொரு பாசம் தான் இது.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகில் உள்ள அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன். சிஎஸ்கே அணி மற்றும் தோனியின் தீவிர ரசிகரான இவர், தனது வீட்டுச் சுவரில் மஞ்சள் வண்ணம் பூசி தோனி மற்றும் சிஎஸ்கே அணி தொடர்பான படங்களை வரைந்துள்ளார். 

துபையில் பணிபுரியும் கோபி கிருஷ்ணன், விடுமுறைக்காகத் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். தோனியின் மீதான தனது பாசத்தை வெளிப்படுத்துவதற்காக தனது வீட்டுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் சிஎஸ்கேவின் மஞ்சள் வண்ணத்தைப் பூசி ஹோம் ஆஃப் தோனி ஃபேன், விசில் போடு என்கிற வாசகங்களையும் வீட்டுச் சுவரில் எழுதியுள்ளார். 

இந்த வீடு தொடர்பான செய்திகள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. இதையடுத்து இதைப் பற்றி படங்களுடன் ட்வீட் செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 

முழு கட்டுரையைப் படிக்க →