முகப்பு
ஐபிஎல்

சென்னை சூப்பர் கிங்ஸுக்காக 4,000 ரன்கள்: தோனி புதிய மைல்கல்

ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸுக்காக மட்டும் கேப்டன் மகேந்திர சிங் தோனி 4,000 ரன்களைக் கடந்துள்ளார்.

ஐபிஎல்

சென்னை சூப்பர் கிங்ஸுக்காக 4,000 ரன்கள்: தோனி புதிய மைல்கல்

ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸுக்காக மட்டும் கேப்டன் மகேந்திர சிங் தோனி 4,000 ரன்களைக் கடந்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸுக்காக மட்டும் கேப்டன் மகேந்திர சிங் தோனி 4,000 ரன்களைக் கடந்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் தோனி 28 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்ஸுக்காக மட்டும் அவர் 4,000 ஐபிஎல் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.

2008-இல் தொடங்கிய முதல் ஐபிஎல் சீசனிலிருந்து தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இடையில் சென்னை சூப்பர் கிங்ஸுக்குத் தடை விதிக்கப்பட்டதால் 2016 மற்றும் 2017 ஐபிஎல்-இல் புணே அணிக்காகக் களமிறங்கினார் தோனி.

ஒட்டுமொத்தமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி 4,596 ரன்களைக் குவித்துள்ளார்.

அதேசமயம், தோனிக்கு இது 200-வது ஐபிஎல் ஆட்டம். ஐபிஎல்-இல் 200-வது ஆட்டத்தில் விளையாடும் முதல் வீரர் தோனி. 
 
முழு கட்டுரையைப் படிக்க →