முகப்பு
ஐபிஎல்

ஐபிஎல் போட்டியில் 200 ஆட்டங்கள்: மும்பை இந்தியன்ஸ் அணி படைக்கவுள்ள புதிய சாதனை!

நான்கு முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி...

ஐபிஎல்

ஐபிஎல் போட்டியில் 200 ஆட்டங்கள்: மும்பை இந்தியன்ஸ் அணி படைக்கவுள்ள புதிய சாதனை!

நான்கு முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி...

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:45 PM
பகிர்:

ஐபிஎல் போட்டியில் 200 ஆட்டங்களில் விளையாடும் முதல் அணி என்கிற பெருமையை மும்பை இந்தியன்ஸ் அணி இன்று அடையவுள்ளது.

நான்கு முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, ஐபிஎல் அணிகளில் நெ.1 அணியாக உள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி இந்த வருட ஐபிஎல் போட்டியில் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்ற முதல் அணியாகவும் உள்ளது. 

இன்று தில்லி அணிக்கு எதிராக விளையாடவுள்ளது. இது, மும்பை அணி விளையாடவுள்ள 200-வது ஐபிஎல் ஆட்டமாகும். ஐபிஎல் போட்டியில் இந்த எண்ணிக்கையைத் தொடும் முதல் அணியும் மும்பை இந்தியன்ஸ் தான். 

இதுவரை விளையாடியுள்ள 199 ஆட்டங்களில் 115-ல் வெற்றி பெற்றும் 80-ல் தோல்வியும் அடைந்துள்ளது. தலா இரு ஆட்டங்கள் சமன் ஆகி அதில் தலா இரு வெற்றி, தோல்விகளை அடைந்துள்ளது.

இந்த வருட ஐபிஎல் போட்டியில் 16 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது மும்பை அணி. 

முழு கட்டுரையைப் படிக்க →