ஐபிஎல்

தோனி சிக்ஸர் அடித்த பந்தை வீட்டுக்கு எடுத்துச் சென்ற ரசிகர்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில்  சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி சிக்ஸர் அடித்தபோது மைதானத்துக்கு வெளியே பறந்த பந்தை ரசிகர் ஒருவர் வீட்டுக்கு எடுத்துச் சென்றார்.

DIN


சார்ஜா: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில்  சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி சிக்ஸர் அடித்தபோது மைதானத்துக்கு வெளியே பறந்த பந்தை ரசிகர் ஒருவர் வீட்டுக்கு எடுத்துச் சென்றார்.
சென்னை-ராஜஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் சார்ஜாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இதில், இரண்டாவதாக பேட் செய்து இலக்கை விரட்டிய சென்னை அணியில் கேப்டன் தோனி, டாம் கரன் வீசிய கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்களை விளாசினார். 
அதில் 2-ஆவது சிக்ஸரை விளாசியபோது, பந்து மைதானத்துக்கு வெளியே பறந்தது. அப்போது மைதானத்துக்கு வெளியே இருந்த ரசிகர் ஒருவர் அந்த பந்தை மிகுந்த மகிழ்ச்சியோடு வீட்டுக்கு எடுத்துச் சென்றது பந்தை பின் தொடர்ந்த கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த விடியோ ஐபிஎல் போட்டியின் அதிகாரப்பூர்வ சுட்டுரையில் பதிவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT