ஐபிஎல்

ஐபிஎல் 2021: அதிக பவுண்டரிகளைக் கொடுத்த சிஎஸ்கே பந்துவீச்சாளர்!

பேட்ஸ்மேன்களிடம் சிக்கிய பந்துவீச்சாளர்கள் யார் யார்?

DIN

இந்த வருட ஐபிஎல் போட்டியில் 12 ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தலா 3 ஆட்டங்களில் விளையாடியுள்ளன.

புள்ளிகள் பட்டியலில் ஆர்சிபியும் சிஎஸ்கேவும் முதல் இரு இடங்களில் உள்ளன. 

ஐபிஎல் என்றாலே சிக்ஸர்கள், பவுண்டரிகள் தான். எப்படிப் போட்டாலும் ரன்கள் அடிக்கும் பேட்ஸ்மேன்கள் தான் ஐபிஎல் போட்டிக்குச் சுவாரசியத்தையும் கொண்டாட்டத்தையும் தருகிறார்கள். அப்படிப்பட்ட பேட்ஸ்மேன்களிடம் சிக்கிய பந்துவீச்சாளர்கள் யார் யார்?  

இதுவரை நடைபெற்ற 12 ஆட்டங்களில் அதிக சிக்ஸர்களை வழங்கியவர்கள் ஆர்சிபி அணியைச் சேர்ந்த கைல் ஜேமிசனும் பஞ்சாப் அணியைச் சேர்ந்த ஜை ரிச்சர்ட்சனும். ஜேமிசன் 10 ஓவர்கள் வீசி 7 சிக்ஸர்களை வழங்கியுள்ளார். அதேபோல ஜை ரிச்சர்ட்சன் 11 ஓவர்கள் வீசி 7 சிக்ஸர்களை வழங்கியுள்ளார். 

பவுண்டரிகளை அதிகம் வழங்கிய பந்துவீச்சாளர் - சிஎஸ்கேவின் ஷர்துல் தாக்குர். அவர் 64 பந்துகளில் 19 பவுண்டரிகள் கொடுத்துள்ளார். பஞ்சாப் அணியைச் சேர்ந்த ரிலி மெரிடித் 60 பந்துகளில் 15 பவுண்டரிகளும் சன்ரைசர்ஸ் அணியின் புவனேஸ்வர் குமார் 72 பந்துகளில் 15 பவுண்டரிகளும் கொடுத்துள்ளார்கள். 

ஐபிஎல் 2021: 12 ஆட்டங்களின் முடிவில்....

அதிக சிக்ஸர்களை வழங்கியவர்கள்

7- கைல் ஜேமிசன் 
7- ஜை ரிச்சர்ட்சன் 

அதிக பவுண்டரிகளை வழங்கியவர்கள்

19-ஷர்துல் தாக்குர்
15-ரிலி மெரிடித் 
14-புவனேஸ்வர் குமார் 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

SCROLL FOR NEXT