முகப்பு
ஐபிஎல்

பந்துகளை வீணடிப்பது குறித்து தோனியின் வெளிப்படையான பேச்சு!

நேற்றைய ஆட்டத்தில் தோனி 17 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். முதல் ஆறு பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:03 PM
பகிர்:

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பந்துகளை வீணடித்து, தான் பேட்டிங் செய்த விதம் பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார் சிஎஸ்கே கேப்டன் தோனி. 

நேற்று மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 45 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வென்றது. முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களே எடுத்தது. பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் அசத்திய மொயீன் அலி, ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.

இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், சென்னைக்கு இது 2-வது வெற்றி; ராஜஸ்தானுக்கு இது 2-வது தோல்வி.

இதனால் புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே அணி 2-ம் இடம் பிடித்துள்ளது. முதல் இடத்தை ஆர்சிபி அணி தக்கவைத்துக்கொண்டுள்ளது.

ஆட்டம் முடிந்தபிறகு சிஎஸ்கே கேப்டன் தோனி பேசியதாவது:

நாங்கள் 180 ரன்கள் அடித்ததில் மகிழ்ச்சி. நாங்கள் இன்னும் அதிகமாக ரன்கள் எடுத்திருக்க வேண்டும். முதல் ஆறு பந்துகளை நான் ஆடிய விதம் வேறொரு ஆட்டத்தில் நிகழ்ந்திருந்தால் நாங்கள் தோற்றுப் போயிருக்க வாய்ப்புண்டு என்றார். 

நேற்றைய ஆட்டத்தில் தோனி 17 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். முதல் ஆறு பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்தார். எனினும் 18-வது ஓவரில் தோனி ஆட்டமிழந்தார். அதன்பிறகு சாம் கரணும் பிராவோவும் அதிரடியாக விளையாடி நல்ல ஸ்கோர் எடுக்க உதவினார்கள். 
 

முழு கட்டுரையைப் படிக்க →