முகப்பு
ஐபிஎல்

ஐபிஎல் போட்டியில் விராட் கோலி நிகழ்த்திய புதிய சாதனை

அடுத்த இடத்தில் உள்ளவர் சிஎஸ்கேவின் சுரேஷ் ரெய்னா. அவர் இதுவரை 197 ஆட்டங்களில் விளையாடி 5448 ரன்கள் எடுத்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
பகிர்:

ஐபிஎல் போட்டியில் 6000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்கிற சாதனையை ஆர்சிபி அணி கேப்டன் விராட் கோலி நிகழ்த்தியுள்ளார்.

மும்பையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வென்றது. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பெங்களூா் 16.3 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் அடித்து வென்றது. சதம் விளாசிய பெங்களூா் வீரா் தேவ்தத் படிக்கல் ஆட்டநாயகன் ஆனாா். விராட் கோலி 72 ரன்கள் எடுத்தார். 

ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் கோலி தான். 196 ஆட்டங்களில் விளையாடி 6021 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதல்முதலாக 6000 ரன்களை எடுத்த முதல் வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார். 

அடுத்த இடத்தில் உள்ளவர் சிஎஸ்கேவின் சுரேஷ் ரெய்னா. அவர் இதுவரை 197 ஆட்டங்களில் விளையாடி 5448 ரன்கள் எடுத்துள்ளார். 

ஐபிஎல் போட்டியில் முதல் வீரராக 4000 ரன்களை எடுத்தவரும் கோலி தான். எனினும் 5000 ரன்களை சுரேஷ் ரெய்னா முதலில் எடுத்தார். கடந்த வருடம் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் போட்டியில் விளையாடாததால் 6000 ரன்கள் எண்ணிக்கையில் அவரை முந்திக் கொண்டார் கோலி.
 

முழு கட்டுரையைப் படிக்க →