ஐபிஎல்

மணீஷ், வார்னர் அரைசதம்: ஹைதராபாத் 171 ரன்கள் குவிப்பு

DIN


சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர். தொடர்ந்து அதிரடி தொடக்கத்தை தந்து வந்த பேர்ஸ்டோவ் இந்த முறை 7 ரன்களுக்கு சாம் கரண் வேகத்தில் ஆட்டமிழந்தார்.

இதனால், பவர் பிளேவில் ஹைதராபாத் பெரிதளவில் அதிரடி காட்டவில்லை. முதல் 6 ஓவர்கள் முடிவில் அந்த அணி 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பவர் பிளே முடிந்தபிறகும் சென்னை பந்துவீச்சாளர்கள் ரன்களைக் கட்டுப்படுத்தி பந்துவீசினர். இதனால், ரன் ரேட் ஓவருக்கு 7-ஐத் தொடவில்லை. 10 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 1 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்தது.

மணீஷ் பாண்டே மட்டும் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து ரன் ரேட்டை 7-ஐத் தாண்டி உயர்த்தினார். ரவீந்திர ஜடேஜா ஓவரில் 1 ரன் எடுத்த அவர் 35-வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.

என்கிடி ஓவரில் 1 சிக்ஸர், ஜடேஜா ஓவரில் 1 சிக்ஸர் அடித்து ஸ்டிரைக் ரேட்டை சற்று உயர்த்திய வார்னர் 50-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். ஆனால், அரைசதம் அடித்தவுடன் 57 ரன்களுக்கு என்கிடி பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் ஆனார்.

அவர் ஆட்டமிழக்கும்போது அந்த அணி 17.1 ஓவரில் 128 ரன்கள் எடுத்திருந்தது.

2-வது விக்கெட்டுக்கு வார்னர், மணீஷ் இணை 106 ரன்கள் சேர்த்தது.

அதே ஓவரில் பவுண்டரி அடித்த மணீஷ், அடுத்த பந்திலேயே பாப் டு பிளெஸ்ஸியின் அற்புதமான கேட்ச்சால் ஆட்டமிழந்தார். அவர் 46 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார்.

இந்த நிலையில் 19-வது ஓவரை ஷர்துல் தாக்குர் வீசினார். கேன் வில்லியம்சன் அந்த ஓவரில் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸர் விளாச 20 ரன்கள் கிடைத்தன. இதன்மூலம், 19-வது ஓவரில் அந்த அணி 150 ரன்களைத் தாண்டியது.

கடைசி ஓவரை கரண் வீசினார். கெதார் ஜாதவ் கடைசி 2 பந்துகளில் பவுண்டரி மற்றும் சிக்ஸரைப் பறக்கவிட்டு அதிரடி காட்டினார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வில்லியம்சன் 10 பந்துகளில் 26 ரன்களும், ஜாதவ் 4 பந்துகளில் 12 ரன்களும் எடுத்தனர்.

சென்னை தரப்பில் என்கிடி 2 விக்கெட்டுகளையும், சாம் கரண் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT