ஐபிஎல்

இஷான், சூர்யகுமார் மிரட்டல் அரைசதம்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 236 ரன்கள் இலக்கு

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்துள்ளது. 

DIN

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்துள்ளது.
அபுதாபியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 55-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் பலபரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ரோஹித், இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர். 
இதில் இஷான் கிஷன் வந்ததில் இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர், 16 பந்துகளில் அரைசதம் எடுத்து அசத்தினார். தொடர்ந்து பேட்டிங்கில் மிரட்டிய இஷான், 32 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின் வரிசை வீரர்களில் சூர்யகுமாரும் தன்பங்கிற்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 40 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 

இதனால் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது. மும்பை அணி இன்றை ஆட்டத்தில் 200 ரன்களுக்கு மேல் எடுத்து, ஹைதராபாத் அணியை 171 ரன்களில் வீழ்த்தினால் மட்டுமே பிளே-ஆப் வாய்ப்பை உறுதி செய்ய முடியும் என்பதால் இந்த அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

SCROLL FOR NEXT