முகப்பு
ஐபிஎல்

தோனி பேட்டிங் தேர்வு: மும்பையில் ரோஹித் இல்லை

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:11 AM
கோப்புப்படம்
பகிர்:


மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

14-வது ஐபிஎல் சீசன் இரண்டாம் பகுதியின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மோதுகின்றன.

மும்பை கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாகக் களமிறங்கவில்லை. அவருக்குப் பதில் கைரன் பொல்லார்ட் கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ளார்.

இதையடுத்து, டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

சென்னையில் பாப் டு பிளெஸ்ஸி, மொயீன் அலி, டுவைன் பிராவோ மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் முதல் பகுதி ஆட்டங்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி 7 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →