ஐபிஎல்

ஐபிஎல்: மும்பையை எளிதாக வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முன்னேறிய கொல்கத்தா

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

DIN

ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

அபுதாபியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. டி காக் 55 ரன்கள் எடுத்தார்.  சுழற்பந்துவீச்சாளர்களான வருணும் நரைனும் அற்புதமாகப் பந்துவீசி மும்பை அணி அதிக ரன்கள் எடுக்கவிடாமல் செய்தார்கள்.  அடுத்து ஆடிய கொல்கத்தா 15.1 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் அடித்து வென்றது. தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் 30 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்களும் ராகுல் திரிபாதி 42 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 74 ரன்களும் எடுத்தார்கள். 

இந்த வெற்றியினால் புள்ளிகள் பட்டியலில் 4-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது கொல்கத்தா அணி. மும்பை அணி 6-வது இடத்துக்கு இறங்கியுள்ளது.

புள்ளிகள் பட்டியல்

 வரிசை  அணிகள் ஆட்டங்கள்  வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 1. தில்லி 9 7 2 14 +0.613
 2. சென்னை 8 6 2 12 +1.223
 3. பெங்களூர் 8 5 3 10 -0.706
 4. கொல்கத்தா 9 4 5 8 +0.363
 5. ராஜஸ்தான் 8 4 4 8 -0.154
 6. மும்பை 9 4 5 8 -0.310
 7. பஞ்சாப் 9 3 6 6 -0.345
 8. ஹைதராபாத்  8 1 7 2 -0.689

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெதர்லாந்தில்..! இஸ்ரேல் மீது தடை விதிக்க முடியாததால் பதவி விலகிய அமைச்சர்!

வியட்நாம் பாரம்பரியம்... ரவீனா ரவி!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது! உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம்

பொன்னேரி அருகே அந்தரத்தில் தொங்கிய அரசுப் பேருந்து!

உத்தரகண்ட் மேகவெடிப்பு: 2 பேர் மாயம்! மீட்புப் பணியில் ராணுவம்!

SCROLL FOR NEXT