ஐபிஎல்

சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் அபராதம்: இம்முறை இரண்டு மடங்கு!

டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதால் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

DIN


டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதால் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (சனிக்கிழமை) ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டெல்லி கேபிடல்ஸ் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் பந்துவீசுவதற்குக் குறிப்பிட்ட கால அவகாசத்தையும் தாண்டி ராஜஸ்தான் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதால் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சீசனில் தொடந்து இரண்டாவது முறையாக இதே தவறைச் செய்ததால் சாம்சனுக்கு ரூ. 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அணியின் மற்ற வீரர்களுக்குக் குறைந்தபட்சம் தலா ரூ. 6 லட்சம் அல்லது தனிநபர் ஆட்டக் கட்டணத்தில் 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான முந்தைய ஆட்டத்திலும் பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதால் சஞ்சு சாம்சனுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT